Thursday, 6 June 2013

இலஞ்சம்..!


கோயில்களில்
காணிக்கை.
பாடசாலைகளில்
நன்கொடை.
தேர்தல்களில்
இலவசம்.
திருமணங்களில்
சீதனம்.
காதலில்
பூங்கொத்து.
வெளிப்படை வேறாயினும்
அடிப்படை ஒன்றே.
இலஞ்சம்! 

Wednesday, 5 June 2013

காணாமற் போனோன் தாய்...!


தெருவில்
சந்தையில்
கோயிலில்
பேருந்தில்
கடற்கரையில்
வயற்பரப்பில்
வெட்ட வெளியில்
கல்யாண வீட்டில்
மயானம் கடக்கையில்
தனித்து இருக்கையில்
'அம்மா' என
யாரும் அழைத்தால்
திடுக்கிட்டு திரும்புகிறாள்
'காணாமற் போனோன்'
தாய்!