Monday, 20 May 2013

பாரம்..பரியம்..!


இன்று இலங்கைத் தமிழ் வானொலி ஒன்றில், 'பாரம்பரியம்' என்பதற்கான அர்த்தத்தை,தமிழ் மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து ஒலிபரப்பினார்கள்.பலரது கருத்துக்கள் திகிலடைய வைத்தன.
உதாரணத்திற்கு:
" அண்ணே...! பாரம்பரியம் என்றால் என்ன ?"
" பாரம்பரியம்..??"
பெரிய இடைவேளை (யோசிக்க்க்க்கிறார் போல..).
" அது தம்பி.. பண்டைய காலத்தில நடந்த விசயங்கள்.."
" பண்டைய காலமென்றா...?"
" பண்டைய காலமென்றால்..M.G.R காலத்தில என்று சொல்லலாம்..!"
அவர் போய்விட்டார்.
அடுத்ததாய் இன்னொருவர். அதே கேள்வி.
" பாரம்?பரியம்?"
இவர் யோசிக்கவில்லை.
" அது..பாரம் சுமக்கிறதின்ட எல்லை."
" ??.......??....அப்படியென்றா?? "
" இப்ப....,முப்பது கிலோ பாரத்தை சுமக்க முடியாட்டி..அது பாரம்பரியம்!"
"அப்ப..,முப்பது கிலோ பாரம்...'பாரம்பரியம்' ???? "
" இல்லையில்ல.....சில பேருக்கு அது பத்து கிலோவாகக்கூட இருக்கலாம்...!"

இந்தக் கூத்தை உடனே தெரிவிக்க,எமது 'பாரம்பரியத்'தின் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.
" நீங்கள் அழைத்த பாவனையாளர்,தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்" என்றது ஒரு குரல்.
உண்மைதான்!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.